11.9.11

தேர்தலில் வென்ற ஜெயலலிதா தேர்வில் தோற்றார்.

தேர்தலில் வென்ற ஜெயலலிதா தேர்வில் தோற்றார்.

முகம்மட் பௌஜிஜி குடும்ப வறுமை காரணமாக பல தொழில்களுக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற அவனால் செய்ய முடிந்தது தெருவோரம் காய்கறி பழங்கள் விற்பது மட்டுமே. தங்கையை பல்கலைக் கழம் வரை படிப்பிக்க வேண்டும் என்பது அவன் கனவு. பாவம் அவனது கடை தெருவோரம் அரச அனுமதியின்றி நடக்கிறது என்று காவற்துறையை அவனுக்குப் ப்ல தொல்லைகள் கொடுத்து வந்தது. ஒரு நாள் காவற்துறையச் சேர்ந்த பெண் ஒருத்தி அவனை பலர்
முன்னிலையில் கன்னத்தில் அறைந்து காறி அவன் மீது உமிழ்ந்து அவனது மரக்கறி-பழங்கள் விற்கும் தள்ளு வண்டியை உடைத்தாள். பாதிக்கப்பட்ட முகம்மட் பௌஜிஜி தன்னைத் தானே தீ முட்டித் தற்கொலை செய்து கொண்டான். இதைத் தொடர்ந்து மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆட்சி கவிழ்ந்தது. ஆண்ட மன்னர் நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட்டார். இது நடந்தது துனிசியாவில்.
Mohamed Bouazizi எமது மண்ணில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் தமக்குத் தாமே தீமூட்டிக் கொண்டனர்?  இவர்கள் உயிருக்கு மதிப்பில்லையா? அரசுக்கு எதிராகப் பொங்கி எழும் தன்மான உணர்வோ தன்னின உணர்வோ எமக்கு இல்லையா?

2011 ஏப்ரலில் நடந்த சட்ட மன்றத் தேர்தலை தமிழின உணர்வாளர்களெல்லாம் இத்தாலிச் சோனியாவின் காங்கிரசுக்கு பாடம் புகட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டு கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதாவை அவரே எதிர்பார்த்திராத அளவிற்கு வெற்றி பெறச் செய்துவிட்டனர். தேர்தலில் வென்ற ஜெயலலிதாவிற்கு தனது ஜாதக பலன் படி தான் இந்தியாவின்பிரதம மந்திரியாக வருவார் என்று தனது சோதிடர்கள் கூறியவற்றை மனதில் கொண்டு தமிழர்களுக்கு தான் நல்லது செய்வேன் என்பது போல் நாடகமாடத் தொடங்கிவிட்டார். ராஜபகசவைப் போர்க்குற்றவாளி என்றார். அவர் சொல்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும். இலங்கை மீது பொருளாதாரத் தடை என்று கூவினார். அதுவும் நடக்காது என்று அவருக்குத் தெரியும். அவரது கனவு தான் சகல தமிழர் தொகுதிகளிலும்  2014இல் அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் அடுத்தஇந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் அதன் மூலம் ஒரு கூட்டணி அரசில் தான் இந்தியாவின் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்பதே. அதற்காக அவர் அடுத்த இந்தியப் பாராளமன்றத் தேர்தல் வரை தான் ஒரு தமிழின நலன்களுக்கு சாதகமாக நடப்பவர் போலக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்.

தமிழின உணர்வாளர்களை தன் பக்கம் வைத்திருந்த ஜெயலலிதாவிற்கு வந்தது ஒரு தேர்வு. அவர் ஒரு தமிழின உணர்வாளரா என்று நாம் எல்லாம் அறிந்து கொள்ள உதவும் தேர்வு. அதுதான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனை. ஜெயலலிதா அந்தத் தூக்குத் தண்டனை வந்தவுடன் ஒன்றும் பொங்கி எழவில்லை. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். இடைக்காலத் தடை உத்தரவு வரும் என்று அறிந்தவுடன் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அதற்கு இந்திய மைய அரசின் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நீயும் உனது தீர்மானமும் என்பது போல் அத் தீர்மானத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றார். அதை கேட்டவுடன் ஜெயலலிதா தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்திய மைய அரசு கொடுக்கும் மதிப்பு அதுதானா என்று பொங்கி எழவில்லை. அவர் சோனியாவின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறார்
தமிழர்களை எப்படி ஏமாற்றுவது என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனர்கள் நன்கு அறிவர்....................................................... THANK U VELTHARMA

No comments:

Post a Comment

cHeetah tamILAN