30.7.11

தோல்வி இன் ரகசியம்

தோல்வி இன் ரகசியம் ..    part -1 
                
                    வெற்றி பெற்று விட்டோம் என தில்லோடு  { ஒரு மாதத்திற்கு பின் } 2.7.11 அன்று மாலை 3.00 மணி அளவில் எங்களுக்கும் பக்கத்துக்கு ஊர் பசங்களுக்கும் மேட்ச் . { பெட் மேட்ச் ரூ . 100 } 

       லக் இல்லாத நாங்கள் முதலில் batting தேர்வு செய்த அவர்கள் 15 ஓவர் முடிவில் 109 ரன் எடுத்தனர் . 110  ரன் எடுத்தால் வெற்றி . batting டச் விட்ட நாங்கள் .                             கடைசில் 60  ரன்கள் எடுத்து தோல்வி பெற்று விட்டோம் ..!!!!!!!!!!
எங்களது கிரிக்கெட் மேட்ச்  match  தொடரும் ..........  

18.7.11

HARIVARASANAM
 Harivarasanam Viswamohanam
Haridadhiswaram Aaradhyapadhukam
Arivimardhanam Nithyanarthanam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Saranakirtanam Bakhtamanasam
Bharanalolupam Narthanalasam
Arunabhasuram Bhoothanayakam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Pranayasathyakam Praananayakam
Pranathakalpakam Suprabhanjitham
Pranavamanidram Keerthanapriyam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Thuragavahanam Sundarananam
Varagadhayudham Vedavavarnitham
Gurukrupakaram Keerthanapriyam
Hariharatmajam Devamashreye

sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Tribuvanarchitam Devathathmakam
Trinayanam Prabhum Divyadeshikam
Tridashapoojitham Chinthithapradam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Bhavabhayapaham Bhavukavaham
Bhuvanamohanam Bhoothibhooshanam
Dhavalavahanam Divyavaranam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Kalamrudusmitham Sundarananam
Kalabhakomalam Gathramohanam
Kalabhakesari Vajivahanam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Srithajanapriyam Chinthithapradam
Sruthivibhushanam Sadhujeevanam
Sruthimanoharam Geethalalasam
Hariharatmajam Devamashreye

Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa
Sharanam Ayyappa Swamy Sharanam Ayyappa

Chennai High court order on common curriculam | சமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு Dinamalar

Chennai High court order on common curriculam | சமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு Dinamalar

16.7.11

தலைமைச் செயலக திருமண மண்டபம்!


தலைமைச் செயலக திருமண மண்டபம்!
கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில்விஜயகாந்தின்


திருமண மண்டபத்தை இடித்தார்கள். அதற்கு


ஆளும் அ.தி.மு.க ஆட்சி என்ன பரிகாரம் செய்யலாம்?





பதில்: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடித்துச்


செயல்படாமல் கிடப்பில் கிடக்கும் தமிழக தலைமை


செயலகக் கட்டடத்தை விஜயகாந்திடம் கொடுத்து,


திருமண மண்டபமாகநடத்தச் சொல்லலாம்.
"சமச்சீர் கல்விபற்றி நான்

அப்பவே சொன்னேன்" என்று ராமதாஸ்


சொல்வதுபோல யாரும் பங்குக்கு வரக்கூடாது, ஆமா!.........

குறிப்பு: ஆனந்த விகடன் 29.06.2011 இதழி 'நானே கேள்வி; நானே பதில்' பகுதியில் வெளிவந்தது.



நன்றி: ஆனந்த விகடன்.



ஆனா ஒண்ணு பாஸ், இந்த ஐடியாவை NAANGATHAAN  முதலில்சொல்கிROM.

13.7.11

நண்பர்கள்: நாங்களும் கிரிக்கெட் ரசிகர்கள்தான் ! வீரர்கள்தான்

நண்பர்கள்: நாங்களும் கிரிக்கெட் ரசிகர்கள்தான் ! வீரர்கள்தான்: "இரண்டு மாதங்களக்கு முன்பு ! நாங்கள் அனைவரும் 9 ம் வகுப்பு படித்து முட..."

போலித் தடுப்பூசி

த் திட்டத்தின் மூலம் பின் லாடனைப் பிடிக்க முயன்ற அமெரிக்கா.

பின் லாடன்














அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனம் பின் லாடன் தனது சகாக்களுடன் ஒரு தொடராபாளர் மூலம் தகவல்களையும் உத்தரவுகளையும் பரிமாறிக் கொள்கிறார் என்று குவாட்டமானோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல் கெய்தா கைதிகளைச் சித்திரவதை செய்து அறிந்து கொண்டது. இந்த தொடர்பாளரின் பெயரை அறிவதற்கு அமெரிக்காவிற்கு மூன்று வருடங்கள் எடுத்தன.  பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து  இந்த மர்ம தொடர்பாளர் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது.
அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த பாக்கிஸ்தானியரான ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்மத் தொடர்பாளரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். அந்த் இருப்பிடம் மூன்று மாடி மாளிகை வழமைக்கு மாறாக ஏழு அடிச்சுவரால் அந்த மாளிகை வளாகமும் ஒவ்வொரு மாடியும் மறைக்கப் பட்டிருந்தன.

மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் ஏமாற்றமடைந்தது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர். அங்குதான் பின் லாடன் இருக்கிறார் என்று அமெரிக்க உளவுத் துறை நம்பியது     
  அம்மாளிகைக்குள் தாக்குதல் நடாத்தி பின் லாடனைக் கொல்லவோ அல்லது உயிருடன் பிடிக்கவோ அமெரிக்கா திட்டம் தீட்டியது. அதற்கு முன்னர் அங்கு இருப்பது பின் லாடன் தான் எபதை டி.என்.ஏ சோதனைமூலம் உறுதி செய்ய அமெரிக்கா விரும்பியது. அமெரிக்கா திட்டமிட்ட தாக்குதல் ஆபத்து நிறைந்தது அதனால் பின் லாடன் தான் அங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்ய அமெரிக்கா ஒரு தடுப்பூசித் திட்டம் ஒன்றை அங்கு செயற்படுத்த விரும்பியது. பின் லாடனின் மாளிகைக்குள் ஒரு தாதியை தடுப்பூசி போட அனுப்பி அங்குள்ளவர்களின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டது.
பின் லாடனின் இரண்டாம் மனைவியும் பிள்ளைகளும்

மருத்துவர் சக்ரி அல்ஃபிடியை இதற்காக அமெரிக்கா வேலைக்கு அமர்த்தியது அபொட்டாபாத் நகர் முழுவதும் Hepatitis B vaccine இற்கான விளம்பரங்கள் மருத்துவரால் செய்யப்பட்டது. பின் லாடன் மாளிகைக்கு ஒரு தாதியை ஒளிப்பதிவுக் கருவிகள் பூட்டப்பட்ட கைப்பையுடன் அனுப்பி அங்குள்ள பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளையாவது சேகரித்தால் போதும் என்று அமெரிக்கா நம்பியது. தாதிக்கு எப்படி தடுப்பூசி மருந்து செலுத்திய பின் இரத்தம் ஊசிமூலம் எடுப்பது என்றும் பயிற்ச்சி  அளிக்கப்பட்டது. பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகள் பின் லாடனின் மாதிரியுடன் ஒத்துப் போனால் அதிலிருந்து பின் லாடன் அங்கிருப்பதை உறுதி செய்யாலாம் என்பது சிஐஏயின் திட்டம். ஆனால் அவர்களால்எந்தஓரு டி.என்.ஏ மாதிரிகளையும் சேகரிக்க முடியவில்லை.  உள் சென்ற தாதி அங்கு நின்ற விலை உயர்ந்த வாகனங்கள் பற்றி விசாரித்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர் வெளியேற்றப்பட்டார். மருத்துவர் சக்ரி அல்ஃபிடியை இப்போது பாக் அரசு கைது செய்து விசாரித்து வருகிறது.               

11.7.11

நாங்களும் கிரிக்கெட் ரசிகர்கள்தான் ! வீரர்கள்தான்

இரண்டு மாதங்களக்கு முன்பு !
                                                                    நாங்கள் அனைவரும் 9 ம் வகுப்பு படித்து முடிக்க போகிறோம் . { நாள் ; 21.4.11 }
நேரம் ; 3.00 , எங்களுக்கும் அருகில் உள்ள வகுப்புடன் { 9a} . கிரிக்கெட் மேட்ச் ................
              முதலில் டாஸ் வென்ற அவர்கள் பேடிங் தேர்வு செய்தார்கள் . { overs ; 12 } முக்கிய குறிப்பு எங்களுக்கு அதான் 21 yards  வைத்து விளையாடும் கிரிக்கெட்  , அவர்கள் 12 over ல் 192 ரன்கள் எடுத்தனர் , 193  ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கு
என்று களம் இறங்கிய நாங்கள் , முதல்லில் இறங்கிய செ. விக்னேஷ் , லி .ராகுல் களம் இறங்கி சட ,சட வென விக்கெட்ட்கள் 
......  அடுத்து இறங்கிய ஹரிஷ் singles தட்ட ரன்னை 30 வரை கொண்டு வந்தான் . கடைசியல் 11.3  ஓவர்ளில்
40 ரன்களுடன் ஆல் அவுட் . 

அத்துடன் விடவில்லை ,,,,,,,,,,
                                              " அனுபவமே நல்ல பாடத்தை கற்றுகொடுக்கும் என்று நினைபோடு ,
 7.5.11 அன்று அதே மைதானம் நேரம் ; 3.00 மாலை. அதே போல் டாஸ் வென்ற அவர்கள் batting
செய்ய 12 ஒவேர்ல் 98 ரன்கள் எடுத்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலகோடு களம் இறங்கிய விக்னேஷ் , ராகுல்  நன்றாக துவக்கம் தந்து 3 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்து எங்களை சிறிதும் ஆசுவசபடுதினர்கள் ... 4 ஒவேர்ல் முதல் பந்தில்
ராகுல் runout ஆக. 4 ஓவர் முடிவில் 28 - 1 
அடுத்து களம் மிறங்கிய பாலாஜி முதலில் மட்டையை போட !! இரண்டு ஓவர்கள் கடந்தன 6 ஓவர் முடிவில் 40 - 1 .
          பின்னர்  7 வது ஓவரில் இருவரும் மிரட்ட !!!!!!!!!! { 4 bowndry , 2 sixer }  அடித்து
ரன்கள்  சட சட சட வென ஏறின .
                      8
வது ஓவரில் இரண்டவது பந்தில் ச்டும்ப் இட் ஆன விக்னேஷ் கடைசில் 35 ரன்களில் அவுட்டாக ! 

             
  அடுத்து இறங்கிய ப.விக்னேஷ் duck அவுட்டாக . 8 வது ஓவரில் முடிவில் 68 -3 . அடுத்து இரங்கிய ஜெயந்த் singles maintain பண்ண . மறுபக்கம் பாலாஜி அதிரடி காட்டினான் . ஸ்கோர் 77- 3 . { balaji stump it } 9 வது  இருதியில் 78 - 4. பனிரண்டு பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி . ஆறு பந்துகளில் ஜெயந்த் 12 ரன்கள் எடுத்து .கடைசி ஓவரில் 9 ரன் எடுத்தால் வெற்றி ....................
              முதல் பந்தில் அவுட் ஆன ஜெயந்த் அடுத்து
இறங்கிய கண்ணன் இரண்டவது பந்தில் four { நான்கு பந்துகளில் 5 ரன் எடுத்தால் வெற்றி } எங்களது அதிர்ஷ்டம் ஒரு wide ball ஒரு ரன் ..
      நான்கு பந்தில் நான்கு ரன் எடுத்தால் வெற்றி { வின்னிங் சாட் } ஒரு சிக்ஸர் அடித்து கண்ணன் எங்கள் அணியை வெற்றி பெற செய்தான் !!!!!!!!!!
                  

10.7.11

புலிக்கு பலியான குடும்பப் பெண்!!

உகந்தையில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிகாலை புலியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30மணியளவில் யாலைக்காட்டுப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தம்பிலுவில் ,வீசி வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி (33வயது) என்ற இரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

அதிகாலை காலைக்கடனை முடிப்பதற்காக தனிமையில் சென்றபோது அப்பகுதியில் பதுங்கிருந்த புலி இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயகலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் தனது குடும்பதினருடன் கதிர்காமத்துக்கு கால்நடையாக பாதையாத்திரை சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்ற பாணமை விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன இலகா பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் சடலத்தை கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Disney Characters Pictures

Disney Characters Pictures

வீர இளைஞர்கள் தேவை !

களத்தில் நின்று போராடுங்கள் ! முகம் நுல் முலம் வீர வசனம் பேச வேண்டாம் !யார் மனதையும் புண்படுத்தும்படி பேச வேண்டாம் ! எழுத வேண்டாம் ! நமக்கு தேவை ! என்னுடைய பெயருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் . என்னுடைய கருத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை போன்று வீர இளைஞர்கள் தேவை !

மாடல் மட்டுமே..,.,.,.,.,


நடிகைகளை விட நடிகைகளின் அம்மாக்கள்தான் ரொம்பவே பில்டப் கொடுப்பார்கள் என்பது நாடறிந்த செய்தி. ஆனால், பெரும்பாலான நடிகைகளை ஆட்டிவைப்பதே அவர்களுடைய அம்மக்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையைவிட அவர் அம்மாவுக்குதான் அஸிடெண்டுகள் பயப்படுகிறார்களாம்.

மாடல் மட்டுமே...
குழந்தையாக இருந்து காதாநாயகியாக புரொமோஷன் வாங்கிய நடிகையின் அம்மா இப்படித்தான் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் பில்டப் கொடுத்துக் கொண்டு இருந்தாராம். டைரக்டர் அசிஸ்டெண்டை கூப்பிடும்போதெல்லாம், அவர் அம்மாவுக்கு பக்கத்தில் பணிவிடை செய்துகொண்டு இருந்தாராம். இதை கவனித்துவிட்ட இயக்குனர் உதவியாளரை அழைத்து ஓங்கி அறைவிட்டாராம். 
இதைப் பார்த்த நடிகையின் அம்மாவுக்கு முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, ‘உடம்புக்கு முடியவில்லை நான் வீட்டுக்குப் போறேன்’ என்று மகளிடம் பொய்சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிவிட்டாராம், அதன்பிறகு அந்த இயக்குனர் இருக்கும் பக்கமே தலைகாட்டுவது இல்லையாம்.

இந்த அம்மாவுக்கு விழவேண்டிய அறை...

பாவம் அந்த உதவி இயக்குனர்.,.,.,,,,,,,,,

கருப்பு ஜூலை மறந்துவிட்டிர்களா உலக தமிழினமே !!!! வீடியோ இணைப்பு

கருப்பு ஜூலை மறந்துவிட்டிர்களா உலக தமிழினமே !!!! வீடியோ இணைப்பு

லெப்.சீலன்


லெப்.சீலன்
(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)
வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட ச......ீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.
அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.

1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
 
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.

திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது....

9.7.11

. Video Calling

FACE BOOK அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள். Video Calling.
[ 2011-07-07 07:20:27 | வாசித்தோர் : 1641 ]

சமூக வலைத்தளமான முகநூல் தற்போது 750 மில்லியன் பயனாளர்களை
அடைந்துள்ளது. இருப்பினும் கூகுள் அறிமுகம் செய்த சமூக   வலைத்தலத்தினால் அது பெரும் போட்டி நிலையினை சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்போது FACE BOOK  தளம் பல புதிய சேவைகளை வழங்கிவருகிறது.


கடந்த மாதத்தில் வெளியான SKYPE புதிய பதிப்பில் FACE BOOK தளத்தினை SKYPE இல் இருந்தவாறு பயன்படுத்த முடியும் என்பதை பதிவு செய்தேன்.

எதிர்வரும் வாரங்களில் FACE BOOK தளம் SKYPE  உடன் இணைந்து வீடியோ சட் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.  FACE BOOK தளத்தில் வீடியோ சட் வசதியினை பெற உங்களின் சட் மெனுவில் புதிதாக ஐகான் சேர்கப்படும் .
அத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து அரட்டை அடிக்க குழு அரட்டை வசதியினையும் அறிமுகம் செய்யவுள்ளது . உங்கள் குழு அரட்டையில் நண்பர்களை இனைத்துகொள்வதர்கான வசதியும் தரப்படும்.

இந்த வசதிகள் எதிர்வரும் புதன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிகளை நீங்கள் உடனே பெற இந்த லிங்க் சென்று முயற்சி செய்து பாருங்கள் . .............................................................,

                       cheetah tamilan .



சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை “இழுத்து மூடு” இளைஞர்கள் மறியல் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தை இழுத்து மூட வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 20 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மாலை ஆறு மணியளவில் இவ்விளைஞர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் விடப்பட்டார்கள்.
இலங்கையில் தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அரசின் துணைத் தூதரகம் சென்னையில் இருக்கக் கூடாது, அந்நாட்டு அரசின் எந்த துறை அலுவலகமும் தமிழ்நாட்டில் செயல்படக் கூடாது என்று கூறி ‘போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்’ என்ற கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று காலை சென்னை 11.00 மணி அளவில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பாம் குரோவ் உணவகத்திற்கு எதிரில் இயங்கிவரும் சிறிலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்னார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
’இழுத்து மூடு, இழுத்து மூடு, சிறிலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்தை இழுத்து மூடு இழுத்து மூடு’ என்று முழங்கிக்கொண்டே சாலையில் அமர்ந்தனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. 30 நிமிட நேரத்திற்கு நடந்த இந்த சாலை மறியலையடுத்து அவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மறியல் குறித்து கேட்டதற்கு, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தாங்கள் மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
கூட்டமைப்பில் உள்ள தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, தமிழ்த் தேசிய மாணவர் இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு மக்கள் பேராயம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை ஆறு மணியளவில் இவ்விளைஞர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் விடப்பட்டார்கள்.

அன்பு ,பன்பு

அன்பு என்பதும்
பன்பு என்பதும்
வந்து நிற்ப்பது
வம்பில் தானடி

வாழ்வில் இல்லையா
தொல்லையா
வஞ்சத்தின் பிடியில்
பிள்ளையா
வசந்தம் என்பது
மழையாடி
வானத்தில் வர்ண
ஜாலமடி

கருவில் சுமப்பது
தமிழடி
கருணை மனமே
உயர்வடி
காதல் நாடுவோர்
கலங்கிடார்
காமத்தின் பிடியில்
வீழ்கிறார்

ஏற்றத்தி பாதை
எதுவென்று
எவரும் இங்கு
புரிந்ததில்லை
ஏனோ வானில்
பறக்கிறோம்
எத்தனை கோலங்கள்
மண்ணிலே................................

நியூசிலாந்து செல்ல முயன்ற 87 பேர் கைது!!

நியூசிலாந்து செல்ல முயன்ற 87 பேர் கைது!!
[ 2011-07-10 08:55:22 | வாசித்தோர் : 81 ]

இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது .

பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவர்கள், பெண்களும் அடங்குவார்கள் எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிசியா எனும் கப்பல் மூலம் நியூசிலாந்துக்க் புறப்பட்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர், கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.