17.5.11

stephenn nnnnnnnn


பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி Stephen Hawking சொர்க்கம் இறப்பின் பின் வாழ்வு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நாம் இறக்கும் போது எமது மூளை கணனி ஒன்று நிறுத்தப் படுவது போல நிறுத்தப்படுகிறது என்கிறார் அவர்.

சென்ற ஆண்டு பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்படவில்லை என்று சொல்லி பல மதவாதிகளை ஆத்திரப்படுதியவர் Stephen Hawking.

Motor Neurone Disease என்னும் நோயால் ப்ல வருடங்களாகப் பாதிக்கப்பட்டு சாவின் நிழலில் தான் வாழுவதாகக் குறிப்பிடுகிறார் Stephen Hawking. தான் இப்போது இறக்கவிரும்பவில்லையாம் இன்னும்பல தான் செய்ய இருக்கிறாராம் Brief History of Time என்ற அதிக பிரதிகள் விற்பனையான நூலை எழுதிய இந்த விஞ்ஞானி.

சொர்க்கம் என்பது இருட்டுக்குப் பயந்தவர்களினிதும் இறப்பிற்குப் பயந்தவர்களினதும் கட்டுக்கதை என்கிறார் Stephen Hawking. கடவுளை நம்புவது இருட்டுக்கான பயத்தையும் இறப்பிற்கான பயத்தையும் நீக்குகிறது என்கிறார் இந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர்.

10.5.11

முகங்கள்

பாரா முகங்கள் பாரெங்கும்
தீராப் பிரச்சினைகள் திசையெங்கும்
வாராத்துணைகள் வழியெங்கும்
ஊரா இது? உறவுதான் ஏது?

பங்காளிகள் பகையாளிகளாயினர்
போராளிகள் துரோகிகளாயினர்
நீதிபதிகள் நிலை தடுமாறினர்
தீர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்

இரத்தத்தின் இரத்தம் மறைந்து விட்டது
உடன் பிறப்போ மறந்து விட்டது
தொண்டர்கள் தொலைவில் நிற்கின்றனர்
உறவெல்லாம் பெயர்ந்த புலத்தில்

மானிடம் இங்கே மரித்து விட்டது
இயற்கை இங்கே இறந்து விட்டது
விடியல் இங்கே விலகி நிற்கிறது
முடிவென்பது எங்கே? எப்போ?                                                        சீடாஹ் தமிழன் .

bin BIN lAdennn



பின் லாடனுக்குப் பின்.....


அமெரிக்க ஊடகம் ஒன்று இப்படி ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டது. பின் லாடனைக் கொன்றபின் சில தாக்குதல்கள் ஒரு குறுகிய காலத்திற்கு நடக்கும் அதன் பிறகு எல்லாம் ஓய்ந்துவிடும் என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு சொல்கிறதாம்!!!!

1979இல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தான் மீது படையெடுத்தது. இதன் பின்னணியில் ஆப்கானிஸ்த்தானிற்கு தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து கொடுத்த அமெரிக்கா அதில் சோவியத்தை உளவு பார்க்கும் கருவிகளையும் பொருத்தியமையே. சோவியத்தை விரட்ட இலகுவான வழி பொதுவுடமை என்பது இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது என்று ஆப்கானிஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் வளர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர்.

ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார்.


அமெரிக்காவின் Operation Cyclone
ஆப்கானிஸ்த்தனில் சோவியத் ஒன்றியப் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் Operation Cyclone என்னும் படை நடவடிக்கை மூலம் திரை மறைவில் பல உதவிகளை ஆப்கானிஸ்த்தான் விடுதலைப் போராளிகளான முஜாஹிதீனிற்கு செய்தது. முஜாஹிதீனில் பின் லாடன் ஒரு புகழ் மிக்க படைத் தளபதியானார்.

1988இல் பின் லாடன் அல் கெய்தா அமைப்பை ஆரம்பித்தார். பின் லாடன் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் எதிரியின் பொருளாதாரத்தைச் சிதறடிக்க வேண்டும் என்பதாகும். கற்றுக் கொண்ட மற்றப் பாடம் எதிரிமீதான வெறுப்பை பலதரப்பிலும் வளர்த்து ஆதரவு திரட்டுவது. இதை பின் லாடன் தனது இரு பெரும் கொள்கையாகக் கொண்டிருந்தார். இந்தக் கொள்கையை பின் லாடன் தனது இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் ஆழமாக வளர்த்துள்ளார். உலகெங்கும் உள்ள அல் கெய்தா ஆதரவாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் அமெரிக்காமீதான வெறுப்பையும் தம் மனதில் ஆழமாகப் பதித்து வைத்துள்ளனர்.
பின் லாடனுக்குப் பின் மேற்குலக நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்காவிற்கு பெரும் தலையிடியாக இருக்கப்போவது பின் லாடனின் மேற்கூறிய இந்த இரு கொள்கைகளுமே.

பின் லாடன் கொல்லப்பட்டமை அல் கெய்தாவிற்கு பேரிழப்பு என்று கூறினாலும் அது அல் கெய்தாவின் முடிவாக அமையாது. அல் கெய்தா ஒரு உலகமயமாக்கப் பட்ட அமைப்பு. உள்ளூர்த் தலைமைகளின் கீழ் பல நாடுகளிலும் செயற்படுகின்றது. இந்த அமைப்புக்கள் தம் உள்ளூர் நிலமைகளுக்கு ஏற்பத் தமது கொள்கைகளை தாமே மேலிடத் தலையீடின்றி வகுத்துச் செயற்படுகின்றன. இவற்றில் பல பின் லாடனின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கின்றன. இவற்றின் வருங்கால நடவடிக்கைகள் பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அல் கெய்தாவின் பெரும் பின்னடைவு
பின் லாடன் கொல்லப் பட்டதிலும் பார்க்க பெரிய பின்னடைவ அல் கெய்தாவிற்குக் கொடுக்கப் போவது பின் லாடனின் மாளிகையில் இருந்து அமெரிக்கா எடுத்துச் சென்ற கணனிகளும் பதிவேடுகளும் கைப்பேசிகளுமே. இவை அல் கெய்தாவிற்கு எதிராக கிடைத்த தங்கப் புதையல். இப்படி ஒரு பெரிய தகவல் திரட்டு இதற்கு முன் ஒரு போதும் எந்த ஒரு அமைப்பிடம் இருந்தும் கைப்பற்றப் படவில்லை. பின் லாடனின் அடுத்த நிலைத் தலைகள் பல உருளுவதற்கான வாய்ப்புக்களை இப்போது அதிகரித்துள்ளன..........................................................  

                                                               சீடாஹ் தமிழன் ,,,,,,.,,,,,,,.,,,,,,,,,,,...,,,,,,,,