16.8.11

Cheetah Tamilan Cricket Slideshow

Cheetah Tamilan Cricket Slideshow: "TripAdvisor™ TripWow ★ Cheetah Tamilan Cricket Slideshow ★ to Kovilpatti (near Tuticorin). Stunning free travel slideshows on TripAdvisor"

7.8.11

பேப்பர் போடுகிறார் ஒரு சூப்பர் மாணவி

கடந்த 01 ஜூலை 2011 புதிய தலைமுறை இதலில் வீடு வீடாகப் பேப்பர் போட்டுக்கொண்டே +2  படிக்கும் மாணவி கீர்த்தனாவை பற்றி , பேப்பர் போடுகிறார் ஒரு சூப்பர் மாணவி , என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது . இந்த கட்டுரயை படித்த கோவில்பட்டியை சேர்ந்த புதிய தலைமுறை வாசகரான விஜய் நம்மை தொடர்புகொண்டு பேசினார்.கீர்த்தனாவை பற்றிய கட்டுரையின் தாக்கத்தால் தன்னுடைய  நண்பர்களுடன் இணைந்து  ஜி - டீம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் . மேலும் அவர் தன்குளுடைய அமைப்பின் முதல் பணியாக கீர்த்தனாவை சந்தித்து உதவியை வழங்க விரும்புவதாகவும் கூறினார் . 
        அங்கே நிகழ்ந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் நேரடி ரிப்போர்ட் இதோ......
     
  அந்த சிறிய குடிசை வீட்டின் வாசலில் நின்று கீர்த்தனாவும் அவரது பெற்றோரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர் .வழக்கமாக நலன் விசாரித்தனர் .
      கீர்த்தனாவிடம் அவருடைய  படிப்பை   பற்றியும் , அதற்கு ஆகும் செலவுகளை பற்றியும் கேட்டு அறிதனர் கீர்த்தனாவின் படிப்பிற்கு ஆகும் செலவை தாங்களே ஏற்றுகொள்வதாக கூறி,கீர்த்தனா இனி பேப்பர் போடாமல் படிப்பில் முழு கவனம் செலுத்துமாறு கேட்டுகொண்டனர் .
   ஜி டீம் உதவிகரத்தின் முதல்படியாக கீர்த்தனாவின் கல்விக்கான முதல் மாத உதவித்தொகை வழங்கபட்டது . அப்போது கீர்த்தனா கூறிய வார்த்தைகள் நம்மை நெகிழ வைத்தது .; இப்படி எல்லாம் ஏன் வாழ்கயில் நடக்குமுன்னு நான் நினைச்சு கூடபார்கள , இதற்காக கடவளுகும் , புதிய தலைமுறை கும் நன்றி சொல்கிறேன் ,இந்த ஜி -டீம் உதவியின் முலம் நான் நல்லா படிச்சு ,சிறந்த மருத்துவர் அல்லது பொறியாளர் எனது கனவை நிச்சியம் நனவாக்குவேன் .......
               கீர்தனவக்கு வாழ்த்துக்கள் ; ஓர் ஏழை  மாணவி இன் வாழ்க்கை இல் கல்வி விளக்கை ஏற்றி வைக்க முன்வந்த , ஜி - டீம் அமைப்புக்கு சீடாஹ் தமிழனின் நன்றி .....  
                   
                     நன்றி ; புதிய தலைமுறை